நிர்வாகப் பிரிவு
மொறட்டுவை பிரதேச செயலகத்திற்கு வருவது எப்படி?
கொழும்பில் இருந்து – காலி வீதியில் மொரட்டுவைச் சந்திக்கு அண்மையாக 500 மீற்றர் தொலைவில் கொழும்புத் திசையில் மொரட்டுவை பிரதேச செயலாளர் அலுவலகம் அமைந்துள்ளது.
பாணந்துறையில் இருந்து புதிய காலி வீதி அல்லது பழைய காலி வீதியில் 8 மீற்றர் தூரம் மாத்திரம் வரும்போது காலி வீதிக்கு அண்மையில் மொரட்டுவை பிரதேச செயலாளர் அலுவலகம் அமைந்துள்ளது.
{slider
பிரதேச செயலகத்தில் இருந்து ETF/EPF விண்ணப்பப் படிவம் பெற்றுக் கொள்ள முடியுமா?
|closed}
இவ் அலுவலகத்தில் இருந்து பெற முடியாது.தொழிலாளர் அலுவலகத்தில் இருந்து மாத்திரம் பெற்றுக் கொள்ள முடியும்
கர்பணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும் 20000/- போசணைக் கொடுப்பணவு எவ்வாறு பெற்றுக் கொள்ள முடியும்?
- கர்ப்பமடைந்து 03 மாதம் தாண்ட முன்பு நீங்கள் சேர்ந்துள்ள தகப்பேறு கிளினிக் உள்ளடங்கும் பிரதேச செயலகத்தில் குழந்தைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் அல்லது இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் உத்தியோகத்தரிடம் விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ள முடியும்.
மரணித்த ஒருவருடைய வங்கியில் சேமிக்கப்பட்ட பணம் மற்றும் அடகு வைக்கப்பட்ட பொருள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் போது கொண்டு வர வேண்டிய ஆவணங்கள் எவை ?
- மரணித்தவரின் இறப்பு சான்றிதழ்
- விண்ணப்பித்தவருக்கு உள்ள உறவிற்கு தொடர்பான ஆவணங்கள்(பிறப்புச் சான்றிதழ்,விவாக சான்றிதழ்)
- வேறு உறுப்பினர்கள் இருப்பின் விண்ணப்பித்தவருக்கு பணம் அல்லது பொருள் கொடுப்பதற்கு அவா்களின் எதிர்ப்பு இல்லை என வழங்கப்பட்ட உறுதிமொழி அறிக்கை
- தேசிய அடையான அட்டை.
கல்வி உதவி பெற்றுக் கொள்ள தகுதியானவர்கள் யார்?
- பிள்ளைகளின் தந்தை மரணித்து இருந்தால் அல்லது குணமாக்க முடியாத ஊனத்தில் இருந்தால் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு கல்வி உதவி பெற்றுக் கொள்ள முடியும்.
அரசு சாராத அமைப்பு ஒன்று பதிவு செய்வது எப்படி?
- ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் தாண்டிய அரசு சாராத அமைப்பு ஆவணங்களை வழங்கியதன் பின்பு பதிவு செய்யப்படும்.
சமுர்த்தி கொடுப்பனவு புதிதாக பெற்றுக் கொள்ள முடியுமா?
-
தற்போது சமுர்த்தி கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளதுடன் மறுபடியும் புதிதாக சமுர்த்தி கொடுப்பனவு கொடுப்பதற்கு விண்ணப்பப் படிவம் கோரப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான கொடுப்பனவு வேண்டி சமுர்த்தி பிரிவிற்கு கொடுக்குமாறு அறிவிப்பு
.
மேலதிக மாவட்ட பதிவாளர் பிரிவு
பிறப்பு அல்லது விவாக அல்லது இறப்பு சான்றிதழின் பிரதி பெற்றுக் கொள்ள முடியுமா?
- பிறப்பு/விவாக/இறப்பு சான்றிதழின் இலக்கம் மற்றும் திகதி தெரியும் என்றால் 100 ரூபாவும்
- பிறப்பு/விவாக/இறப்பு சான்றிதழின் இலக்கம் மற்றும் திகதி தெரியாது என்றால் 200 ரூபா பிரதேச செயலகத்திற்கு செலுத்தி சான்றிதழை பெற்றுக் கொள்ள முடியும்.
பிறப்பு பதிவு செய்வது எப்படி?
- சாதாரண பிறப்பு ஒன்றை பதிவு செய்வதற்கு பிறந்து மூன்று மாதத்திற்குள் குறிப்பிட்ட பிரிவில் உள்ள பிறப்பு பதிவு செய்யும் பதிவாளரை சந்தித்து பிறப்பை பதிவு செய்ய வேண்டும்.
- மூன்று மாதம் பிந்திய பிறப்பு ஒன்றை பதிவு செய்வதற்காக மேலதிக மாவட்ட பதிவாளரை சந்தித்து தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்.
ஓய்வூதியப் பிரிவு
சிவில் ஓய்வூதியம் பெறுபவர் மரணித்ததன் பின்பு விதவைகள் மற்றும் அநாதைகள் ஓய்வூதியம் செய்து கொள்வது எப்படி?
- முதலில் ஓய்வூதியம் பெற்றவரின் இறப்பு சான்றிதழை பெற்று ஓய்வூதியத்தை நிறுத்த வேண்டும்.
- அதிக பணம் இருந்தால் அதனை பெற்றுக் கொள்வதற்கு வங்கிக்கு கடிதம் மூலம் அறிவித்தல்.
- பின்பு குறிப்பிட்ட நபரை கீழே காணப்படும் ஆவணங்களை கொண்டுவருமாறு அறிவித்தல்.
- ஓய்வூதியம் பெற்றவரின் இறப்பு சான்றிதழின் மூலப் பிரதி
- விதவையின் பிறப்பு சான்றிதழின் மூலப் பிரதி
- விவாக சான்றிதழின் மூலப் பிரதி
- விதவையின் வங்கிப் புத்தகத்தின் நகல் பிரதி
- விதவையின் தேசிய அடையாள அட்டையின் நகல் பிரதி
- விதவைகள் மற்றும் அநாதைகள் அட்டையின் நகல் பிரதி ஒன்று அல்லது விதவைகள் மற்றும் அநாதைகள் இலக்கம்
- கிராம சேவகர் மூலம் சான்றழிக்கப்பட்ட பாஸ்போா்ட் அளவு கலர் புகைப்படம்
- மேலே கூறப்பட்ட ஆவணங்களில் நகல் பிரதி அனைத்தும் கிராம சேவகர் மூலம் சான்றழிக்கப்பட வேண்டும்.
- குறிப்பிட்ட தகவல்களை கொடுக்கப்பட்டதன் பின்பு கோப்பு தயாரிக்கப்பட்டு விதவைகள் மற்றும் அநாதைகள் ஓய்வூதியம் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
ஓய்வூதியம் பெறுபவரின் ஓய்வூதியம் ஏன் நிறுத்தப்பட்டுள்ளது?
- குறிப்பிட்ட வருடத்திற்குரிய வாழ்க்கைச் சான்றிதழ் கொடுக்கப்படாததால் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது.
- ஓய்வூதியம் பெறுபவரின் வருகையின் பின்பு வாழ்க்கைச் சான்றிதழ் படிவம் கொடுக்கப்பட்டு கிராம சேவகர் மூலம் சான்றிழிக்கப்பட்டு கொண்டு வருமாறு கூறப்படுகின்றன.
- பின்பு வாழ்க்கைச் சான்றிதழ் ஒப்படைக்கப்பட்ட பின்பு ஓய்வூதியம் புதுப்பிக்கப்படுகின்றது.
விதவை மரணித்ததன் பின்பு வாரிசுகளுக்கு ஏன் ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை?
- விதவைகள் மற்றும் அநாதைகள் ஓய்வூதிய சட்டத்தின் படி விதவைகள் மற்றும் அநாதைகள் ஓய்வூதியத்திற்கு உரிமை கொண்ட நபர் மரணித்த பின்பு அந்நபருக்கு உரித்தான ஓய்வூதியம் அல்லது நிலுவைத் தொகை இருந்தால் அந்த பணம் அவர்களின் வாரிசுகளுக்கு கொடுப்பதற்கு சட்ட விதிகள் இல்லை என விளக்கப்படும்.














